வலி தாங்கி வலி தாங்கி உயிர் வாழ காரணமான இதயமே சுமையாகி போனது ...!!!நட்பில் விழுந்த விரிசளினால் இதயமே இன்று சுமையாகி போனது...!!!...உண்மையாய் உன்னை நேசிததுதான் குற்றமா ...??? அதனால் தான் எனக்கு இதனை பெரிய தண்டனையா ...???உனக்கும் எனக்குமான நட்பென்னும் இந்த இலாபம் இல்லா ஒப்பந்தம் இன்றுடன் முடிந்து போனது ஏனோ ...???கண்ணாடி மனதில் கல் எறிந்தால் உடைந்துவிடும் என்று நீ அறியாமல் போனது ஏனோ ...??? சுயநலம் இல்லா நட்பில் உன்னால் மட்டும் எப்படி சுயநலமாக இருக்க முடிந்தது ...??? உன்சுயநலம் அறியாமல் நேசித்த நான் தானே இன்று கண்ணீர் சிந்துகிறேன் . நடந்தவை எல்லாம் கனவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் துடிக்கிறது ....உன் அன்பு பொய் என்று அறிவுக்கு புரிகிறது அனால் ஏனோ தெரியவில்லை இன்னும் என் மனதுக்கு மட்டும் புரியவில்லை .... பொய் என்று தெரிந்தும் அதற்காக தான் மனம் ஏங்குகிறது ..... இது தான் மனதின் இயல்போ ...???
No comments:
Post a Comment