ஆபரணம் அணிந்ததால் ....
பட்டுபூச்சி தன்னை மாய்த்து கொள்ளும்
என்னவள் புடவை உடுத்தினால் ....
ரோஜாவும் ஏக்கம் கொள்ளும் என்னவளின்
கூந்தலில் தவழ்திட....
சூரியனும் தன்னை மறைத்து கொள்ளும்
என்னவள் வாடாமல் இருக்க...
நிலவும் தன்னை தாழ்த்தி கொள்ளும்
என்னவளின் அழகை கண்டு.....
இலக்கணமும் தடுமாறும் என்னவளை
வர்ணனை செய்திட...
வீரமும் கற்று கொள்ளும் என்னவளின்
பேராற்றல் கண்டு......
பிரபஜமே போற்றும் என்னவளின்
குணம் அறிந்தால்....
பெண்மைக்கு ஒரு புதிய இலக்கணம்
என்னவள் .....
நேர்மையும் தைரியம்மும் என்னவளின்
தனி சிறப்பு .....
இதற்குமேல் என்னவளை பற்றி எழுதிட
எனக்கு ஆற்றல் இல்லை .....
